புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகே, பெருந்தலைவர் காமராஜர் டாடா மேஜிக் டெம்போ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நலச் சங்கத்தின் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில், இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மாநில தலைவர் டாக்டர். எஸ். ஆனந்த்குமார் தேசிய கொடி ஏற்றி, 79வது சுதந்திர தினத்தை கொண்டாடினர்.
போக்குவரத்து காவல் துறையின் துணை உதவி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர் முன்னிலை வகித்தனர் ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சமூக ஆர்வலர் திரு. மொய்தீன் மற்றும் பஜன்கோவா ஊழல் எதிர்ப்பு மற்றும் ஊழியர் நலச் சங்கத்தின் செயலாளர், இணைப் பேராசிரியர் டாக்டர். கே. எஸ். குமாரவேல் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
தலைமை உரை ஆற்றிய டாக்டர். எஸ். ஆனந்த்குமார், நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து 79 ஆண்டுகள் கடந்து, இந்தியா வளர்ச்சி அடைந்த நிலையில், உலக நாடுகள் வியந்து பார்க்கின்றன. ஆனால், அதில் சிலர் உள்நாட்டு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக செயல்படுகின்றனர். அண்மையில், இலங்கையை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் போதைப்பொருட்களை கடத்தியது, இதற்கு எடுத்துக்காட்டாகும். அதனால், நமது நாட்டின் இறையாண்மை காக்க எப்போதும் நாட்டுப்பற்றுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். இல்லை என்றால் மீண்டும் அந்நிய சக்திகள் நம்மை அடிமைப்படுத்தும் அவலம் உருவாகும், என்றார்.
ஓட்டுநர்கள் திரு. பீர்முகமது, திரு. சபாபதி, திரு. குமார், மற்றும் திரு. ஜகன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
முன்னதாக, டெம்போ சங்கத்தின் செயற் தலைவர் திரு. சந்திரசேகர் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியின் இறுதியில் செயலாளர் திரு. செல்லதுரை, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்