புதுச்சேரி பாஜக தலைவர் தனது வாழ்த்து செய்திகளில் கூறியதாவது..பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் பரிந்துரையின்படி, பாஜக மூத்த தலைவரும் மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநருமான ஆர்எஸ்எஸ் சுவயம்சேவகர் C.P.ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்திய குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருப்பது தமிழக மக்கள் மீது பாரதப் பிரதமர் அவர்கள் வைத்துள்ள பாசத்திற்கும், நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இவர் இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் மக்களின் குரலாகவும் விளங்கியவர். மத்திய அரசில் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட சேவை ஆற்றியவர். கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியவர். ஜார்கண்ட், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஆளுநராகச் சிறப்பாக பணியாற்றியவர். அடிப்படையில் ஆர்எஸ்எஸ் சுவயம்சேவகராக சமூக பணியில் ஈடுபட்டு, உயரிய பொறுப்புகள் வரை தன்னை நிரூபித்தவர்.

அவரது அர்ப்பணிப்பு, நேர்மை, நிர்வாக திறமை ஆகியவை அவரை இந்த உயரிய பதவிக்குத் தகுதியானவராக ஆக்கியுள்ளன. இந்த நியமனம், பாரதிய ஜனதா கட்சிக்கும், தமிழக மக்களுக்கும் தென்னிந்தியாவிற்கும் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க அங்கீகாரமாகும்.புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில், திரு.C.P.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எங்களின் இதயம் கனிந்த வாழ்த்துகளையும் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *