மீனவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி
சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் வழங்கினார் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிற இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி இராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதியை சேர்ந்த 19-க்கும் மேற்ப்பட்ட மீனவர்களின் குடும்பத்தார்களை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளரும் ஆன காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவிவழங்கினார்
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒன்றிய அரசிற்கு அழுத்தம் கொடுத்து விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை மீட்க வலியுறுத்துகிறேன் என்று அவர்களுக்கு நம்பிக்கை கூறினார்