தருமபுரி மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அதியமான் கோட்டை பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், தமிழ்நாட்டில் முதல்முறையாக விவசாயிகளுக்கு (E – KCC) திட்டம் என்று சொல்லக்கூடிய இ-கிசான் கிரெடிட் கார்டு மூலம் விவசாய கடன் வழங்கும் திட்டத்தையும் துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து வேளாண்மை துறை, வருவாய்த்துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரூபாய் 1705 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பயனாளிகள் கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தில் உரையாற்றினார் அப்போது தருமபுரி மாவட்டத்திற்கு பல்வேறு அறிவிப்புகளையும், மேலும் புதுப்புது திட்டங்களையும் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் உரையாற்றினார் அப்போது பேசிய அவர்.
விவசாயிகளின் நலன் கருதி கூட்டுறவு வங்கிகளுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக பயிர் கடன் விண்ணப்பிக்கும் வகையில் விண்ணப்பித்த அன்றைக்கு பயிர் கடன் வழங்கக்கூடிய வகையில் திட்டத்தை கொண்டு செல்லும் வகையில் கொண்டு வந்துள்ளோம்.
2021 தேர்தலுக்கு முன்பு தேர்தல் விடியல் பயணத்தில் தேர்தல் வாக்குறுதிகளை தெரிவித்தோம் – நமக்கு எதிரானவர்கள் இதை நிறைவேற்ற முடியாத வாக்குறுதி, இதனால் பேருந்துகளை குறைத்து விட்டு, பேருந்து கட்டணங்களை உயர்த்தி விடுவார்கள் என தங்களுடைய இஷ்டத்திற்கு கதை திரைக்கதை வசனங்களை ஏற்படுத்தினர்.
ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் நிதி நிலைமையை பாகுபடுத்தியது தொடர்ந்து நாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு கையெழுத்திட்ட கை தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய கை என்றார்.
ஒவ்வொரு மாதமும் சுமார் 1000 ரூபாய் என ஆட்சியில் 51 மாதத்தில் 50 ஆயிரம் ரூபாய் பெற்று இருக்கின்றனர். இந்த விடியல் திட்ட பயணத்தை கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலத்தில் கொண்டு வந்து தாங்கள் கொண்டு வந்த திட்டத்தை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு அன்புள்ள மக்களும் பயனடைகின்றனர்.
ஆட்சிக்கு எதிராக சில விஷமிகள் அவதூறுகளை பேசுகின்றனர். எதிர்க்கட்சியினர் தெரிவிப்பது அவர்களுடைய அரசியல் அவர்களை விடவும் மலிவான அரசியல் செய்வது பாஜக அரசு ஒன்றிய ஆளுநர். திமுக ஆட்சி மீது அவதூறு பரப்புகின்றார். திராவிடத்தை பழிப்பார். சட்டங்களுக்கு ஒப்புதல் தர மாட்டார். இல்லாத திருக்குறளை அச்சிட்டு தருவார். தமிழ் தாய் வாழ்த்து அவமதிப்பார். தமிழ்நாட்டு வரக்கூடிய மாணவர்களை இழிவு படுத்துவார். உண்மைக்கு புறம்பாக இல்லாத பொல்லாதவர்களை பேசி பீதியை கிளப்புவார். இந்தியாவிலேயே தலை சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாகவும் இதை ஒன்றிய பாஜக அரசு வெளியிடுகின்ற புள்ளி விபரமே சாட்சி.
இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடைபெறும் மாநிலங்களில் பாஜக ஆளுகின்ற உத்தர பிரதேசம் தான் முதலிடத்தில் உள்ளது. அதனால் ஆளுநர் அவர்கள் கம்பு சுத்த வேண்டியது தமிழ்நாட்டில் அல்ல பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் தான் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம் ஆர் கே பன்னீர்செல்வம், ஏ.வ.வேலு, ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.