சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சார்பில் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நல உதவி.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில்
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு
நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சார்பில் தமிழக முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அச்சிறுப்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பேனா பென்சில் இனிப்புகள் வழங்கினர்.
இந்நிகழ்வில் சர்வதேச தலைவர் டாக்டர் டி.ஜி.மனோகர் ஆலோசனை பெயரில் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் எ.சுரேஷ்குமார் மாநிலத் தலைவர் ஐ.அகமதுரியாஸ் ஆகியோரின் தலைமையில் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஒன்றிய தலைவர்கள் ஏ.பி.முருகேசன் ஏ.கோபாலகிருஷ்ணன்
கௌரவ தலைவர் ஜி.ராஜ்குமார் அச்சிறுபாக்கம் நகர செயலாளர் எம்.நரேஷ்குமார்
செங்கல்பட்டு மாவட்ட அமைப்பாளர் தக்ஷிணாமூர்த்தி அச்சிறுப்பாக்கம் ஒன்றிய
துணைத் தலைவர் ரசூல் ஒன்றிய துணை செயலாளர் தி.ருத்ராபதி உள்ளிட்ட
நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.