கோவை மாவட்டம் வால்பாறையில் வரும் 2026 நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அதிமுகவினர் துரிதமாக செய்து வருகின்றனர் இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேற்பகுதியில் அதிமுகவினர் அமைக்கப்பட்டுள்ள சுமார் 69 பூத் கமிட்டி களையும் நேரில் சந்தித்து உரிய ஆலோசனைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் வால்பாறை சட்டமன்ற பொறுப்பாளர் வெங்கடாச்சலம், ராஜ்குமார், நகரச்செயலாளர் மயில் கணேசன், தொழிற் சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, வழக்கறிஞர் ஐ.கணேசன் மற்றும் பலர் முன்னிலையில் நடைபெற்றது முன்னதாக முன்னாள் அமைச்சருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பேசும் போது 2026 சட்ட மன்ற தேர்தலில் நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து கருத்து வேறுபாடின்றி ஒற்றுமையாக பணிசெய்து அதிகப்படியான வாக்குகளை பெற பாடுபடுவதோடு பொதுமக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும் அப்போதுதான் எடப்பாடி யாரின் தலைமையிலான ஆட்சி அடைந்தவுடன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு கோரிக்கைகளை தீர்த்துவைக்க முடியும் என்று கேட்டுக்கொண்டார்

அதைத்தொடர்ந்து ஒவ்வொரு பூத் வாரியாக நிர்வாகிகளை அழைத்து நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது இதில் 69 பூத் கமிட்டிகள், நகர, சார்பு அணி, வார்டுகழக, கிளைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *