கோவையில் உள்ள சேரன் கல்விக் குழுமம் சார்பில் நிறுவன நாள் கொண்டாடப்பட்டது. அதன்படி சேரன் SMS கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிறுவன நாள் தின விழாவில் உலக மண்டலம் பெண்கள் பாதுகாப்பு துறை அலுவலர் தாஹினி தேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் சேரன் கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சினேகா ஸ்ரீதரன் தலைமை வகித்தார்.
அதேபோன்று Cheran Institute of Health Scienceல் நடைபெற்ற நிறுவன தின விழாவில் கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்வில் சேரன் கல்விக் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சினேகா ஸ்ரீதரன் தலைமை வகித்தார்.
மேலும் கல்லூரி முதல்வர்கள் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.