சிலம்பம் ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு பிரிவுகளில் சிலம்பம் சுற்றி அசத்தல்

சென்னை கிண்டியில் உள்ள தனியார் பள்ளியில் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் டெவெலப்மென்ட் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாட்டின் முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான மாபெரும் சிலம்பப் போட்டி நடைபெற்றது

சிலம்பம் ஸ்போர்ட்ஸ் டெவெலப்மென்ட் அசோசியேசன் ஆப் தமிழ்நாட்டின் தலைவர் கராத்தே எம்.பி. சுதர்சன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட வீரா வீராதனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்

அதிலும் குறிப்பாக ஒற்றைக் கொம்பு இரட்டைக் ,கொம்பு,சுருள்வாள், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஐந்து வயது முதல் 18 வயது வரை உள்ள ஆண் பெண் வீராங்கனைகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சிலம்ப ஆசிரியர் மகா குரு சூரியமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர் வீரகாணிகளுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆசிரியர் சுதர்சன்:-

பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த 1500 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் சிறந்த சிலம்ப வீரர்களுக்கு வெள்ளி காயின் பரிசாக வழங்கப்படுகிறது அரசாங்கத்தின் சார்பில் இருந்து எந்தவித உதவியும் கிடைப்பதில்லை என்பது அனைத்து சிலம்ப ஆசிரியர்களுக்கும் தெரியும்.

சிலம்பத்திற்காக அரசாங்கத்தின் சார்பில் மூன்று சதவீத இட ஒதுக்கீடு கொடுத்து இருந்தாலும் இதுவரையில் சிலம்பம் பயிற்சி மேற்கொள்ள எந்த ஒரு விளையாட்டு தளமும் அமைக்கப்படவில்லை. தங்கள் பகுதியை இருக்கும் மாநகராட்சி விளையாட்டு திடலில் பயிற்சி மேற்கொண்டாலும் அங்குள்ள அரசியல்வாதிகளால் அது தடுத்து நிறுத்தப்படுகிறது

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சி எம் டிராபி முழுவதுமாக பிரச்சனையில் தான் சென்று கொண்டிருக்கிறது. ஒரே ஒரு அமைப்பிடம் மட்டுமே கொடுத்து இந்த டிராபி ஒருதலைபட்சமாக நடத்தப்படுகிறது

தொகுதி வாரியாக பேட்மிட்டன்,பாஸ்கெட் பால் போன்ற விளையாட்டிற்கு நிதி ஒதுக்கப்பட்டு கட்டிட அமைப்புகள் கட்டித் தரப்படுகிறது அதை ஏன் சிலம்ப பயிற்சிக்கு கொடுப்பதில்லை அரசாங்கம் பயிற்சி கூடத்தை இலவசமாக எங்களுக்கு தர தேவையில்லை அனைத்து ஆசிரியர்களும் பணம் கொடுத்து பயன்பெற தயாராக உள்ளோம்

மாநில அளவிலான மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவோர் பயிற்சி மேற்கொள்ள சரியான இடம் இல்லை. வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் இங்கு தங்கி பயிற்சி பெறவும் போதிய வசதிகள் இல்லை.

விளையாட்டுத்துறைக்கு எத்தனையோ கோடிகள் ஒதுக்குவதாக கூறுகின்றனர் எங்கே ஒதுக்கி உள்ளனர்.ஒரே ஒரு விளையாட்டு அரங்கத்தை மட்டும் கட்டிக் கொடுத்து விட்டால் போதுமா என பேசினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *