மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என 1,500-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மேலும் பெண் கைதிகளுக்கு தனி வளாகம் உள்ளது. இதற்கிடையில் சிறை கைதிகள் வழக்கு விசாரணைக்காக வெளியே சென்று வரும்போது தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை போலீசாருக்கு தெரியாமல் எடுத்து வருவதாகவும், சிறைக்குள் தடை செய்யப்பட்ட கஞ்சா, செல்போன் பயன்பாடு இருப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதை தொடர்ந்து மதுரை போலீஸ் துணை ஆணையர் இனிகோ திவ்யன், சிறை சூப்பிரண்டு சதீஷ்குமார் தலைமையில் 2 உதவி ஆணையர்கள், 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 134 போலீசார் மத்திய சிறைச்சாலையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சிறை கைதிகள் அறை, குளிக்கும் அறை, சமையல் கூடங்கள், தோட்டப்பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். இந்த சோதனை யில் கஞ்சா உள்ளிட்ட பொருட் கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதிரடி சோதனை காணமாக சிறை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.