கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டம் தனியார் கூட்டரங்கில் தமிழர் தேசம் கட்சியின் மாநில,மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்ர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர் K.K. செல்வகுமார் தலைமை தாங்கி சிறப்பித்தார்
இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் என்னவென்றால் திருச்சியில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் முதல் வாரத்தில் நடைபெறவிருக்கும் முத்தரையர் அரசியல் அதிகார அமைப்பு மீட்பு மாநாடு குறித்து மாவட்ட மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் குரு.மணிகண்டன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் தளவாய் ரமேஷ், மாநில அமைப்பு செயலாளர் செம்.மகுடீஸ்வரன், கரூர் மாவட்ட செயலாளர் கள்ளை அருள், மாவட்ட இணை செயலாளர் S.R சீரங்கன், கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், கரூர் மாநகர செயலாளர் ரகுநாதன், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் பிரசாந்த், கடவூர் ஒன்றிய செயலாளர் மோகன், மாவட்ட, மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.