கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் ரவுண்டானா அருகில் அமைந்துள்ள காமராஜர் சிலை முன்பு முதல் இந்திய விடுதலைப் போராளி ஒண்டிவீரின் 255வது வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இவ்நிகழ்வானது பட்டியல் இன விடுதலை பேரவை நிறுவனத் தலைவர் தலித் கே.ஆனந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் வழக்கறிஞர் தனபாலன், கரூர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுதா, தாந்தோணி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு ஒண்டிவீரன் படத்திற்கு முன்பு கோஷங்கள் எழுப்பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.