திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே இளைஞர் காங்கிரஸ் சார்பில் பாரத ரத்னா, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 81- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
விழாவிற்கு வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார், சமத்துவ மக்கள் கழகம் திருவாரூர் மாவட்ட செயலாளர் வலங்கைமான் எம்.எஸ். காளிமுத்து முன்னிலை வகித்தார், முன்னதாக இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜமுருகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வலங்கைமான் நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் கலியமூர்த்தி கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி பாரத பிரதமரின் 20 அம்ச கோரிக்கை, மற்றும் பஞ்சாயத்து ராஜ் போன்ற ராஜீவ்காந்தியின் சாதனைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்,
நிகழ்ச்சியில் அன்பு, சாம் பாண்டி, கபூர், ரஹ்மத்துல்லா மற்றும் மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.