மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம்
தென்காசி
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் இருந்து தமிழ்நாடு முழுவதும் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்ததை தொடர்ந்து
தென்காசி நகராட்சிக்குட்பட்ட காட்டுபாவா நடுநிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தென்காசி நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) செல்வி ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு காலை உணவு திட்டத்தின் மூலம் காலை உணவினை வழங்கி உடன் அமர்ந்து காலை உணவு அருந்தினார்கள்.இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் மாணவிகளுடன் கலந்துரையாடி அவர்களோடு தரையில் அமர்ந்து ஒன்றாக உணவருந்தியது மாணவிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.