மணலி புதுநகரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசஸ்தலை ஆற்றங்கரையை நீர்வளத்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணைய ஆணையர் கட்டா ரவி தேஜா மணலி மண்டல உதவி கமிஷனர் தேவேந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்
அப்போது கரை பலவீனமாக உள்ள இடங்களை உடனடியாக சீர் செய்வது எனவும் மேலும் மணல் மூட்டைகள் தேவைப்படும் இடங்களில் அடுக்கி இளமையை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர் மேலும் புது நாப்பாலையம் சடையங்குப்பம் ஆர் எல் நகர் போன்ற பகுதிகளில் அதிகாரிகள் குழு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்
இந்த ஆய்வின் போது கவுன்சிலர் நந்தினி சண்முகம், 16வது வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன். கொசஸ் தலை ஆற்றில் உபரி நீர் அதிக அளவில் திறந்து விடப்படுகிறது அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சீரான அளவில் உபரி நீர் வெளியேற்ற வேண்டும் என அதிகாரியிடம் கூறினார்