திண்டுக்கல் நகர் புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் இயக்கம் (கல்வி& சமூகப் பணிகள் 1950-2025) சார்பாக 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உளவியல் பாலியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் பள்ளியின் பவள விழா அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர், தலைவர் அருள் பணி.மரியநாதன் சே.ச இயக்குனர் -முன்னாள் மாணவர் இயக்கம்.இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள் பணி.ஸ்டீபன் லூர்து பிரகாசம் சே.ச முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி உளவியல் பாலியல் பற்றிய விழிப்புணர்வு அதற்கான வழிமுறைகள் பற்றிய காணொளி மூலம் மாணவர்களுக்கு அருள் பணி மரு.ஜார்ஜ் பெர்னாட்ஷா OFM கருத்துகளை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கப்பு ஜின் சபை மாநில துணைத்தலைவரும் அனுகிரகா கல்லூரியின் முதல்வர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆசிரியர்.ஜெரோம் நிக்கோலஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.மேலும் முன்னாள் மாணவர் அமைப்பின் செயலாளர்.ஜேம்ஸ், பொருளாளர்.மைக்கேல் ஒருங்கிணைத்து வழி நடத்தினர்.