தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 16-வது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் A.S.G.தர்மராஜன், உபதலைவர் A.S.ஜீவகன், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் B.ராமச்சந்திரன், கல்லூரியின் செயலாளர் A.S.S.S.சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். கல்லூரியின் முதல்வர் Dr.C.மதளைசுந்தரம் வரவேற்புரையாற்றினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித்சிங் IAS சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொறியியல் மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் பொழுதே தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகளில் கலந்து கொண்டு தொழில்நுட்ப நிறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றும், எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து எதிர்காலத்தை தீர்மானிக்கும் குறிக்கோளுடன் சிறந்த ஒழுக்கம். கடின உழைப்புடன் தொடர் முயற்சி, பிற மொழியினை கற்றுக்கொள்ளுதல், மற்றும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வளர்ச்சி ஒன்றே நோக்கம் என்று பொறியியல் மாணவர்கள் செயல்பட வேண்டுமென்றும், கிராமப்புற மாணவர்களுக்கு கல்வியே முன்னேற்றத்தை அளிக்குமென்றும் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கி சிறப்புரையாற்றினார்.
மேலும் 2026-ம் ஆண்டிற்கான தீம் ஆப் இன்டஸ்டிரி ரீடினஸ் எக்சலனியம்
இவ்விழாவில் நன்னம்பிக்கை பேச்சாளர் மற்றும் எழுத்தாளர், சென்னை ஜஸ்டீஸ் பசிர் அகமது சையது மகளிர் கல்லூரி பேராசிரியருமான டாக்டர் I.S. பர்வீன் சுல்தானா சிறப்பு, விருந்தினராக கலந்து கொண்டு பெற்றோர் குழந்தைகளுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்துதல், ஆசிரியர்கள், மாணவர்களிடையேயான உறவுகளை மேம்படுத்துதல், மாணவ பருவத்தில் தற்காலிகமான மகிழ்ச்சியினை தவிர்த்து. நேர்மறையான எண்ணங்களை வளர்த்து எதிர்கால தேவைக்கான அறிவு மற்றும் ஆற்றல்களை பெறுவதற்கான வழிமுறைகள், தலைமை பண்பு, ஆங்கில மொழித்திறனை வளர்த்துக் கொள்ளுதல், நேரத்தை சரியாக பயன்படுத்துல், வாழ்வின் மாற்றங்கள், சவால்களை எதிர்கொள்ளும் திறனை வளர்த்து கொள்ளுதல், ஆகியவற்றை பற்றி விளக்கினார். மேலும், முதலாமாண்டு மாணவர்களுக்கு இதர மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இவ்விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் ஆட்சிமன்றகுழு உறுப்பிளர்கள். நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், இணைச்செயலாளர்கள். கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் முதல்வர்கள், துணை முதல்வர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துணைமுதல்வர்கள் டாக்டர்.N.மாதவ டாக்டர்.M.சத்யா வேலைவாய்ப்பு அலுவர் டாக்டர்.C.கார்த்திகேயன், முதலாமாண்டு துறையின் தலைவர் A.வேம்பத்துராஜோஷ். முதலாமாண்டு துறையின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.சித்ரா மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். கல்லூரியின் இணைச்செயலாளர் T.சுப்ரமணி நன்றியுரை கூறினார்.