மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடல்-திரளான பக்தர்கள் பங்கேற்பு..

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் 8-வது நாள் நிகழ்ச்சியாக நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடல் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் ஆவணி மூலத் திரு விழா கடந்த 20-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடை பெற்று வருகிறது. கடந்த 20-ம் தேதி முதல் 25-ம் தேதிவரை சந்திரஉத்சவம் நடைபெற்றது. சிவ பெருமானின் திருவிளையாடல் நிகழ்வுகளின் ஐதீக விழா நடைபெறுகிறது.

சிவபெருமான் நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடலின் விழா நடைபெற்றது. மீன்களை உண்டது தாமரையின் சுபாவம் எனினும் முனிவர்கள் நீராடி குளத்திலிருந்த மீன்களை உண்பதாகாது எனக் கருதி மீன்களை உண்ணாதிருந்த நாரை முனிவர்களின் உரை யாடல் மூலம் மதுரையம்பதியின்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடலுக்கு பிரியாவிடையுடன் எழுந்தருளிய சுந்தரேசுவரர் சிறப்பை அறிந்து. மதுரைக்குவந்து பொற்றாமரை குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டு முக்தி பெற்றது என்ற ஐதீகப்படி இந்த விழா நடைபெற்றது.

மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள பழைய திருக் கல்யாண மண்டபத்தில் இந்த உற்ஸவம் நடைபெற்றது. பிரியாவிடையுடன் மீனாட்சி சுந்தரேஸ்வரரும். தனியாக மீனாட்சி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிறகு ஐதீக முறைப் படியான வழிபாடுகள் நடை பெற்றன.

இதையடுத்து, சிவபெருமான் நாரைக்கு முக்தி கொடுத்த திரு விளையாடல் புராணம் படிக்கப் பட்டு, சிறப்பு தீப, தூப வழிபாடு கள் நடத்தப்பட்டன. பிறகு , நாரை முக்தி பெற்றதை காட்சிப் படுத்தும் கையில் சுந்தரேஸ்வரரின் பாதம் அருகே நாரை சிலை இடம்பெறச் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த
இரவு நிகழ்ச்சியாக பிரியா விடை யுடன் சுந்தரேஸ்வர் வெள்ளி வாகனத்திலும், மீனாட்சி அம்மன் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *