பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி….
பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் பாபநாசம் ஊரக காவல்துறை சார்பில் சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இப்பேரணியில் பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகவேலு கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்து சைபர் கிரைம் விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினார்.
முன்னதாக கபிஸ்தலம் பாலக்கரையில் இருந்து பள்ளி மாணவ மாணவிகள் சைபர் கிரைம் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பி பொதுமக்களுக்கு சைபர் கிரைம் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பள்ளியை வந்தடைந்தனர்.இந்த பேரணியில் காவல்துறையினர் ,ரோட்டரி சங்கத்தினர், பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.