மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம்
தென்காசி மாவடம் ஆலங்குளத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய ‘மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி.இந்நிகழ்ச்சியில் தமிழ் மொழியின் பெருமையையும் அதன் வளர்ச்சி கனவையும் எடுத்துரைக்கும் வகையில், அரசு சார்ந்த சிறப்பு நிகழ்ச்சி “மாபெரும் தமிழ்க் கனவு” சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சொற்பொழிவாளர் கவிஞர் நெல்லை ஜெயந்தா தென்காசி மாவட்டவருவாய் அலுவலர் சீ. ஜெய சந்திரன், ஆலங்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சிவசங்கரி மற்றும் தமிழ் ஒருங்கிணைப்பு குழு தலைவர் முனைவர் பழனியப்பன் மற்றும் தமிழ் அறிஞர்கள் அலுவலர்களும் கொண்டு ஊக்கமளிக்கும் உரைகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பல்வேறு கல்லூரி மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக உரைகள், கவிதைகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் தமிழின் செம்மையையும் எதிர்கால கனவையும் வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி, ஜே. பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மெரிட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஆலங்குளம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களும், மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருந்து பேராசிரியர்களும் மாணவ மாணவிகளும் திரளாக கலந்து கொண்டனர்.
இவ்விழா ஏற்பாடுகளை கல்லூரி தலைவர் ஜீசஸ்ராஜா, கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயகுமார், நிர்வாக இயக்குநர் கனகபாண்டியன், கல்லூரி மேலாளர் ராம் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து கல்லூரி பேராசிரியர் களும் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.நிகழ்ச்சியில் பங்கேற்று சொற்பொழிவு நிகழ்த்திய மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழும் நினைவு பரிசாக புத்தகமும் வழங்கப்பட்டது