தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் me முன்பு (12.09.2025) காலை 10.00 மணியளவில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க 39வது அமைப்பு தின விழா கொடியேற்ற நிகழ்வு தாராபுரம் வட்டாரத்தில் நடைபெற்றது.
இந்தநிகழ்வில் மாவட்ட பொருளாளர் வ.சரவணகுமார் தலைமை தாங்கி கொடி ஏற்றி வைத்தார், மேலும், மாநில செயற் குழு உறுப்பினர் செல்வகுமார் முன்னிலை வகித்தார், மற்றும் சங்க கொடியினை முன்னணி விஜயன் எற்றினார், மேலும், முன்னாள் மாநில துணைத்தலைவர் மணியன் சிறப்புரையாற்றினார்,
மாவட்ட நிர்வாகிகள் கண்ணன், நகுல் பிரபு, அசோகன்,மாணிக்க வட்டார நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்…