வீடுகள் தேடி சென்ற ரேஷன் பொருட்கள்
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மாதம் வயதான முதியோர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை துவக்கி வைத்தார் அதன் அடிப்படையில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை அந்தந்த பகுதியில் உள்ள நியாய விலை கடை ஊழியர்கள் கடைகளுக்கு வர முடியாத வயதான முதியோர்களின் வீடுகளுக்கு சென்று நேரில் ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி இன்று தூத்துக்குடி பகுதியில் நியூ காலனியில் உள்ள ரேஷன் கடை பணியாளர்கள் நியாய விலை கடைகளுக்கு வர முடியாத வயதான முதியோர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வீடுகளில் வைத்து கைரேகை பதிவு செய்யப்பட்டு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது
இதனை அடுத்து முதியோர்கள் வீடு தேடி எங்களுக்கு ரேஷன் பொருட்கள் வருகிறது என்று சந்தோஷத்தில் ரேஷன் பொருட்களைப் பெற்ற வயதான முதியோர்கள் சந்தோஷத்தில் கூறுகின்றன