திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகளில் முறைகேடுகளை தடுத்து நிறுத்திட வேண்டும்.
வேலை அட்டை உள்ள அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும்.சம்பள பாக்கிகளை உடனடியாக வழங்க வேண்டும். சம்பளம் ரூ.336 ஐ முழுமையாக வழங்க வேண்டும். 100நாள் வேலையை 200நாட்களாகவும் சம்பளமாக 600 உயர்த்தி வழங்க வேண்டும், உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்.அருள் செல்வன் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட குழ உறுப்பினர் பேச்சியம்மாள், ஒன்றிய துணை செயலாளர் தெண்டபாணி, துணை தலைவர் முருகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கேட்ட.சதீஸ்குமார், பன்னீர், மனோகரன், குழந்தைவேலு, கன்னிமுத்து உட்பட இருநூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.