செங்குன்றம் செய்தியாளர்

சென்னை மாநகராட்சி சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் மாதவரம் மண்டலம் ,29 வார்டு .ஜி.என்.டி.சாலையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் மா.சுப்பிரமணியம் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மையங்களுக்கு சென்று சிகிச்சைகளை குறித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தார்.

அதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பாக அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை, மட்டும் பல்வேறு துறைச் சார்ந்த சான்றிதழ்கள், பயன்கள் ஆகியவற்றை வழங்கினார்.

இந்த மருத்துவ முகாமில் இரத்த பரிசோதனை ,இசிஜி மற்றும் எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் பொது மருத்துவம், இருதயம் ,எலும்பு, நரம்பியல் ,தோல், மற்றும் மகப்பேறு போன்ற பல்வேறு மருத்துவங்கள் 17 வகையான சிறப்பு மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுபவர்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், கார்டியோகிராம் எக்கோ, பெண்களுக்கான கர்ப்பபை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனைகளும் செய்யப்பட்டது.

இதில் மாதவரம் மாநகராட்சி மண்டல உதவியாளர் கணேசன், மண்டல குழு தலைவர் நந்தகோபால், கவுன்சிலர்கள் கார்த்திகேயன்திருநாவுக்கரசு,சந்திரன் , ஏழுமலை மற்றும் மாநகராட்சி பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள்,மாதவரம் சுதர்சனம் எம் எல் ஏ,வட்டார துணை ஆணையர் கட்டாரவி தேஜா, மண்டல குழு தலைவர் நந்தகோபால் கவுன்சிலர்கள் கார்த்திகேயன் திருநாவுக்கரசு,கனிமொழி சந்திரன், கல்லூரி தலைவர் டாக்டர் லீமா ரொசாரியோ,முதல்வர் அன்னம்மாள், கல்லூரி ஆலோசனை அதிகாரி முருகேசன் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *