கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ், ஏ வி ஆர் மருத்துவமனை ஆகிய இணைந்து நடத்திய கேலக்ஸி முகவர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் ஹோட்டல் டைமண்ட் ஹாலில் நடைபெற்றது.
முகாமினை கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் பொது மேலாளர் அபுசாலிஹ், திருச்சி மண்டல மேலாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் தலைமை ஏற்று துவக்கி வைத்தார்கள்.கும்பகோணம் கிளை பிரிவு தலைவர் நவீன் வரவேற்றார். மருத்துவமனையின் மருத்துவர் சசி பிரியா முன்னிலை வகித்தார்.திருச்சி மண்டல பயிற்சியாளர் மனோஜ்குமார் முகவர்களுக்கு நிறுவனத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.
.இம்முகாமில், பொது மருத்துவம்,ரத்த பரிசோதனை, சக்கரை நோய்,உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் முகவர்களுக்கு வழங்கப்பட்டது. டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு முகவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்தனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்ட முகவர்களுக்கு கேலக்ஸி தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.