பிரபல சுவிஸ் வாட்ச் தயாரிப்பு நிறுவனத்தின் ப்ரீட்லிங் பிராண்ட் வாட்ச் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் தனது புதிய கிளையை துவக்கியுள்ளது.
இந்தியாவில் ஆறாவது கிளையாக துவங்கப்பட்டுள்ள ,இந்த கிளை,தனித்துவமான அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் வகையில், 1000 சதுர அடி பரப்பளவில், பாரம்பரியம் மற்றும் நவீன வசதிகள் இணைந்த ஓர் அழகான அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது….
இந்தியாவில் முதன்முறையாக ஸ்பாட்லைட் மிரர் அனுபவத்துடன் ப்ரீட்லிங் பெண்களுக்கான பிரத்யேக வாட்ச் கலெக்சன் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் நேரடியாக அணிந்து பார்த்து விருப்பமானதை தேர்வு செய்யலாம்.
இது குறித்து, ப்ரீட்லிங் இந்தியா நிர்வாக இயக்குனர் பிரதீப் பானோத், ஜிம்சன் கோவை இயக்குநர் நவாஸ் ஆகியோர் கூறுகையில்,பிரீமியம் தரத்திலான வாட்சுகளை விரும்பும் வாடிக்கையாளர்களை பிரைட்லிங் உலகத்தின் அனுபவத்தை நேரடியாக உணர புதிய ஷோரூமிற்கு வரவேற்பதாக கூறிய அவர்,வாடிக்கையாளர்கள் அமர்ந்து பிடித்தமான, பொருத்தமான வாட்ச் தேர்வு செய்வதற்கு ‘ப்ரீட்லிங் வாட்ச பார்’ என்ற அமைப்பு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்…