கமுதி அருகே நீராவி கரிசல்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே நீராவி கரிசல்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

கமுதி அருகே நீராவி கரிசல்குளத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில், ராமசாமிபட்டி,நீராவி, என்.கரிசல்குளம் எம்.எம். கோட்டை, மேலராமநதி, கே.எம். கோட்டை, ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இம் முகாமிற்கு மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வி தலைமை தாங்கினார். வட்டாட்சியர் ஸ்ரீராம்,சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சேதுராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மேலும் மண்டல துணை வட்டாட்சியர்கள் வெங்கடேஷ்வரன், வேலவன், வட்ட வழங்கல் அலுவலர் விஜயா, வருவாய் ஆய்வாளர்கள் பூர்ணிமா, சதீஸ்குமார் பிரியதர்ஷினி, பரமேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் மாரீஸ்வரி, சரவணகுமார், ரவிக்குமார், ராதிகா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முகாமில் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்ப மனு மற்றும் வருவாய்துறை, ஆதிதிராவிடர் நலன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்,
விவசாயத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை,தொழிலாளர் நலத்துறை,
சுகாதாரத் துறை, தோட்டக்கலை துறை, சமூக நலத்துறை உட்பட பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட மொத்தம் மனுக்கள் 721 பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *