கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூரில் பாரதப் பிரதமர், விஸ்வகுரு நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேவை இருவார விழாவாக கொண்டாடுகிறது.
அதன் ஒரு பகுதியாக மாவட்ட தலைவர் V.V.செந்தில்நாதன் தலைமையில் கரூர் வெண்ணமலை ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் வீரவேல் கொடுத்து சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து கரூர் அன்புக்கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் மாவட்ட தலைவர் V.V.செந்தில்நாதன் மதிய உணவு வழங்கினார்.

கரூர் கிழக்கு ஒன்றிய தலைவர் அருள்முருகன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் செல்வராஜ், உமாதேவி, சாமிதுரை, மாவட்ட துணைத் தலைவர்கள் ஆறுமுகம், சக்திவேல், முருகன், பழனிச்சாமி, மாவட்ட செயலாளர்கள் முருகேசன், வெங்கடாசலம்,ரமற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.