கமுதியில் ஆசிரியர்கூட்டணி பொதுக்குழுகூட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் நடந்தது கூட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, பணி ஓய்வு பெற்ற பெருமாள்குடும்பன்பட்டி ஆசிரியர் சுந்தர் ஆகியோருக்கு பாராட்டு விழாவும் . சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்ட ஏ.தரைக்குடி, இடையங்குளம் பள்ளி ஆசிரியைகளுக்கு பாராட்டுவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.கூட்டத்தில் உறுப்பினர்கள் ஆசிரியைகள் அனைவரும் கலந்து கொண்டனர்