தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழா-நற்கருணை தேர்பவனி நடைபெற்றது
தென்காசி,
தென்காசியில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழா வை முன்னிட்டு நற்கருணை தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர்.
தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல பெருவிழாவில் நேற்று இரவில் தேர் பவனி நடைபெற்றது. இதில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தென்காசியில் பிரசித்தி பெற்ற புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத் திருவிழா கடந்த 20ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் ஒவ்வொருநாளும் காலை, மாலையில் சுற்று வட்டார பகு திகளை சேர்ந்த பங்குத் தந்தையர்கள் பங்கேற்று நவநாள் திருப்பலி நடந்தது.
அதனைத் தொடர்ந்து 27ம்தேதி காலையில் வாடியூர் பங்குதந்தை லியோ ஜெரால்டு, பாட்டாக்குறிச்சி மலையாள திருப்பலி ஜாய் கல்லரக்கல் நவநாள் திருப்பலி நடத்தினர். மாலையில் பாளை மறை மாவட்ட முதன்மை குரு அருள்ராஜ், மதுரை ஹென்றி ஜெரோம், சேவியர், அருள் அந்தோணி, லியோ ஜெரால்டு தலைமையில் நற்கருணை பெருவிழா, நற்கருணை பவனி நடந்தது. 28ம்தேதி காலையில் பாளை ஆயர் இல்ல சேவியர், பாட்டாக்குறிச்சி மலையாள திருப்பலி, சேவியர் தைப்பாடத்து நடத்தினார். மாலையில் சிவகங்கை மறைமாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம், சிவகாசி பங்குத் தந்தை ஜான் மார்ட்டின், மதுரை பங்குத் தந்தை எட்வின் சகாயராஜ் தலைமையில் மிக்கேல் அதிதூதரின் தேர் பவனி நடந்தது.
அப்போது தென்காசி அதிதூதர் அலயத்திலிருந்து நற்கருணை தேர் பவனி வெளியே கிளம்பிய போது திடீரென மழை பெய்தது. இந்த மழை யையும் பொருட்படுத்தாமல் தேர் பவனி தொடர்ந்து நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
தேர் பவனி ஆலயத்திலிருந்து துவங்கி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் ஆலயத்தில் நிறைவடைந்தது.
இந்த விழாவில் 29ம்தேதி காலை 4.30 மணிக்கு நற்செய்தியின் தூதுவர் சபை குருக்கள், 5.45 மணிக்கு பேட்டை பங்குத்தந்தை ஸ்டீபன் ஆகியோர் திருவிழா திருப்பலியும், காலை 7.30 மணிக்கு மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோ ணிசாமி தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியும், 10.30 மணிக்கு திருவ னந்தபுரம் உயர்மறை மாவட்ட இணை ஆயர்கிறிஸ்துதாஸ் ராஜப்பன் மலையாள திருப்பலியும், பகல் 12 மணிக்கு அகரக் கட்டு பங்குத்தந்தை அலாய்சியஸ் துரை ராஜ் குணமளிக்கும் வழிபாடு, மாலை 6.30 மணிக்கு பாளை மறைமாவட்ட பொரு ளாளர் தீபக் மைக்கேல் ராஜா திருப்பலி நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து 30ம்தேதி காலை 6 மணிக்கு பாளையஞ் செட்டிகுளம் பங்குத்தந்தை ஜோமிக்ஸ் தலைமையில் கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்காசி திருத்தல அதிபரும், பங்குத்தந்தையுமான ஜேம்ஸ், உதவி பங்குத்தந்தை ஜீயோ சந்தனம். அமலவை அருட் சகோதரிகள், பங்கு பேரவையினர், அன்பியங்கள் செய்திருந்தனர்.