கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினர்களாக இருந்து வரும் 1 வது வார்டு திமுக கவுன்சிலர் செல்வக்குமார், 10 வது வார்டு திமுக கவுன்சிலர் காமாட்சி கணேசன், 12 வது வார்டு திமுக கவுன்சிலர் அன்பரசன், 17 வது வார்டு அதிமுக கவுன்சிலர் மணிகண்டன் ஆகியோர் கையொப்பமிட்ட புகார் மனுவை நேற்று காவல் நிலையத்தில் அளித்துள்ளனர் அந்த மனுவில் வால்பாறை நகராட்சியில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தினருக்கு விதிகளை மீறி தொடர்ந்து டெண்டர் வழங்கப்பட்டு வருவதாகவும் சில டெண்டர் பணிகளை முழுமையாக முடித்தும் முடிக்காமலும் காசோலைகளை வழங்கி நகராட்சி வருவாயை மோசடி செய்து வருவதாக குற்றம் சாட்டி நகர் மன்ற தலைவர் மற்றும் அவரின் கணவர் செல்வம், நகர் மன்ற துணைத்தலைவர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது