தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தேனி எம் பி தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கூட்டரங்கில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் ஆகியோர் தலைமையில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் முன்னிலையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு குழுத் தலைவர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பேசியதாவது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் மத்திய அரசு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மாநில அரசுடன் இணைந்து எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதனை கண்காணித்து அந்த திட்ட பணிகளை விரைந்து முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு நடத்தப்படுகிறது
எனவே அனைத்து துறை அலுவலர்களும் மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் பொதுமக்களிடையே சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அலுவலகங்கள் பணியாற்றிட வேண்டும் என குழுத் தலைவரும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் கே தமிழ்ச்செல்வன் எம்பி துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் . இந்த கூட்டத்தில் நகர் மன்ற தலைவர்கள் தேனி ரேணுப் பிரியா பாலமுருகன் பெரியகுளம் சுமிதா சிவக்குமார் போடிநாயக்கனூர் ராஜராஜேஸ்வரி சங்கர் கம்பம் வனிதா நெப்போலியன் கூடலூர் பத்மாவதி லோகந்துரை சின்னமனூர் அய்யம்மாள் ராமு நகராட்சி ஆணையாளர்கள் தேனி போடி எஸ்.பார்கவி கம்பம் உமாசங்கர் கூடலூர் முத்துலட்சுமி சின்னமனூர் கோபிநாத் பேரூராட்சி மன்ற தலைவர்கள் பூதிப்புரம் கவியரசு பால்பாண்டியன் மேல சொக்கநாதபுரம் கண்ணன் காளி தாஸ் தாமரைக்குளம் ச.பால்பாண்டி தென் கரை வி. நாகராஜ் வீரபாண்டி கீதா சசி பழனிசெட்டிபட்டி மிதுன் சக்கரவர்த்தி கம்பம் புதுப்பட்டி சுந்தரி பாஸ்கரன் செயல் அலுவலர்கள் வீரபாண்டி வெ.கணேசன் தென்கரை குணாளன் தாமரை குளம் முருகன் கம்பம் புதுப்பட்டி சா. இளங்கோவன் அனுமந்தன்பட்டி சீனிவாசன் உத்தமபாளையம் சின்னசாமி பாண்டியன் மேல சொக்கநாதபுரம் சிவக்குமார் போடி மீனாட்சிபுரம் யோக ஸ்ரீ பூதிப்புரம் ராஜா அய்யனார் உள்பட நகராட்சி அதிகாரிகள் பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்