புதுவை இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி யினை வேலைவாய்ப்பு செல் ஏற்பாடு செய்தது.மூன்றாம்ஆண்டு வணிகவியல் மற்றும் நிறுவன செயலறியல்துறை மாணவிகளுக்கு செப்டம்பர் 23 மற்றும்24 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இறைவணக்கத்துடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது.கல்லூரி முதல்வரும் செயலளருமான முனைவர் அ.பாத்திமா அவர்கள் தலைமையேற்று உரையாற்றுகையில் வாழ்க்கையை திட்டமிடல்,போட்டித் துறைகளில் தைரியமாக செயல்படுவதன் அவசியம் என்னும் கருத்தை வலியுறுத்தினார்.
திரு.லாரன்ஸ் ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.பல்வேறு தொழில் பாதைகள்,போட்டித் தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான திறன்கள் குறித்து வழிகாட்டினார்.
முதல்நாள் நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள்,சுயதொழில் வாய்ப்புகள்.போட்டித்தேர்வுகளின் முக்கியத்துவம் மற்றும் வெற்றியடைய தயாராகும் முறைகளை விரிவாக மாணவிகளுக்குக் கூறினார். எதிர்கால இலக்குகளை வேலைவாய்ப்புப் பாதையை திட்டமிட திரு.லாரன்ஸ் அவர்கள் கூறிய வழிகள் மாணவிகளுக்க உற்சாகமளிப்பதாக இருந்தது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் வேலைவாய்ப்புத்திறன்களை வளர்ப்பதற்காள பயிற்சிகள் வழங்கப்பட்டது. மாணவிகள் சுயவிவரம் தயாரிக்கும் முறைகள், நேர்முகத் தேர்வுக்கு தயாராகும் முறைகள் குழுவிவாதங்கள் மூலம் மாணவிகளுக்கு நம்பிக்கையும்,பகுப்பாய்வத்திறனும் வளர வழிவகுப்பதாக இருந்தது.
300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.பயிற்சி மாணவிகளுக்கு மிக்க பயனுள்ளதாக அமைந்தது. நுன்றியுரையுடன் நிகழ்ச்சி இன்தே நிறைவு பெற்றது.