மயிலாடுதுறை செய்தியாளர்
இரா.மோகன்
மயிலாடுதுறை நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் எம்பிளாயீஸ் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சித்தர்காட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்வு பொருள் வாலிபர் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் எம்பிளாயீஸ் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மண்டல தலைவர் நக்கீரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு, கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகளை இயக்கம் செய்வது தொடர்பாக காலதாமதமாக பணிக்கு வந்த கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் என்பவரை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்தும், மயிலாடுதுறை மண்டலத்தில் உள்ள கொள்முதல் சுமை தூக்கும் தொழிலாளர்களை சேமிப்புக் கிடங்குகளுக்கு சென்று அவர்களது கொள்முதல் நிலையங்களில் இருந்து அனுப்பப்படும் நெல் மூட்டைகளை இறக்குவதற்கு வற்புறுத்துவதை கண்டித்தும், மயிலாடுதுறை மண்டலத்தில் ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் தலா பத்தாயிரம் மூட்டைகளுக்கு மேல் தேக்கம் அடைந்திருப்பதை உடனடியாக இயக்கம் செய்ய வலியுறுத்தியும், அவ்வாறு இயக்கம் செய்யப்படாவிட்டால் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளில் ஏற்படும் இயக்க இழப்புக்கு கொள்முதல் பணியாளர்கள் பொறுப்பேற்க இயலாது என வலியுறுத்தியும், நெல் சேமிப்பு கிடங்குகளில் ஆல் பற்றாக்குறை இருந்தால் அதனை தலைமை அலுவலக உத்தரவுப்படி அவுட்சோர்சிங் டெண்டர் முறையில் சுமை தூக்குவோரை வேலைக்கு அமர்த்தி நெல் மூட்டைகளை இறக்கிட வேண்டும் என்றும் துணை மேலாளர் (கொள்முதல் அனுப்புதல்) அத்துமீறிய நடவடிக்கைகள் மற்றும் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் பேசி, கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.