கூத்தாநல்லூர்., மார்ச். 07

ரமலான் மாதம் நோன்பு வைத்து பல்வேறு மத நல்லிணக்க நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் மத நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடத்துவதும். மதம் பார்க்காமல் சமூக நல்லிணக்க நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது என இம்மாதம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளான ரமலான் நோன்பு என்பது மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே பொதக்குடியில் ஐக்கிய ஜமாஅத் சார்பில் சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டிஆர்பி ராஜா , நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாகை செல்வராஜ் தஞ்சை முரசொலி திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் அனைத்து மத நண்பர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்கள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *