ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் வரும் 28, 29,30
ஆகிய தேதிகளில் தேசியத் தலைவர் தெய்வீகத் திருமகனார் பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் 63-வது குருபூஜை மற்றும் 118 வது ஜெயந்தி விழா நடைபெற உள்ளது.
இதில் திமுக, அதிமுக, பார்வர்ட் பிளாக், பாஜக,காங்கிரஸ், தேவர் சமுதாய தலைவர்கள், வெளிநாட்டு தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள், சமுதாய தலைவர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் ஏராளமான பங்கேற்று பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து ,விரமிருந்து, அழகு குத்துதல், முளைப்பாரி, பால்குடம், முடிகாணிக்கை,ஜோதி ஓட்டம், பறவை காவடி, காவடி எடுத்தல், பாத யாத்திரை என பலவகையான நேர்த்திக் கடன் செலுத்த பசும்பொன் கிராமத்திற்கு பொதுமக்கள் லட்சக் கணக்கில் வந்து செல்ல உள்ள நிலையில், இதற்கான பாதுகாப்பு முன்னேறுபாடுகள் முக்கிய வழி சாலைகள் அடிப்படை வசதி, தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் காலோன் ஆய்வு செய்தார்.
இதில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் பசும்பொன் கிராமத்திற்கு நேரில் சென்று முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வந்து செல்லும் சாலை பொதுமக்கள் வாகனங்கள் வந்து செல்லக்கூடிய வழித்தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது பசும்பொன் தேவர் திருக்கோயில் அறங்காவலர் காந்திமினாள் நடராஜன்தேவர் தலைமையில் பழனி ,அழகுராஜா அனைவரையும் வரவேற்றார், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், வட்டாட்சியர் ஸ்ரீராம், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் சந்திரசேகர், லெட்சுமி உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.