தேனி மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை சார்பில் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் என் ராமகிருஷ்ணன் ஆண்டிபட்டி ஆ. மகாராஜன் பெரியகுளம் கே எஸ் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் எம்பி தங்க தமிழ்ச்செல்வன் பேசும்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சுகாதாரத் துறைக்கு ஏராளமான சிறப்பு திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது தற்பொழுது புதியதாக செயல்படுத்தப்பட்டுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் ஒன்றியங்களில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம்களில் மருத்துவ பரிசோதனை தேவைப்படும் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள்
மேலும் உங்களுடன் ஸ்டாலின் திட்டமும் பொது மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த இரண்டு திட்டங்களையும் செயல்படுத்துவதில் அரசு அலுவலர்கள் மிகச் சிறப்பாக செயலாற்றி வருகிறார்கள் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது
இதில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை சுகாதார தேவைகள் குறித்து ஆலோசனை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அரசுக்கு கருத்துரு அனுப்பப்படுகிறது
தேனி மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளும் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது இவ்வாறு தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார் இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜ. மகாலட்சுமி ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் அபிதா ஹனீப் நகராட்சி நகர் மன்ற தலைவர்கள் தேனி ரேணுப் பிரியா பாலமுருகன் பெரியகுளம் சுமிதா சிவக்குமார் போடிநாயக்கனூர் ராஜராஜேஸ்வரி சங்கர் சின்னமனூர் அய்யம்மாள் ராமு கம்பம் வனிதா நெப்போலியன் கூடலூர் பத்மாவதி லோகந்துரை நகராட்சி ஆணையாளர்கள் சின்னமனூர் கோபிநாத் கம்பம் உமாசங்கர் கூடலூர் முத்துலட்சுமி போடி தேனி எஸ்.பார்கவி பேரூராட்சி செயல் அலுவலர்கள் கம்பம் புதுப்பட்டி சா. இளங்கோவன் அனுமந்தன்பட்டி சீனிவாசன் உத்தமபாளையம் சின்னச்சாமி பாண்டியன் கோம்பை சுருளி வேல் தேவாரம் பாலசுப்பிரமணியன் மேல சொக்கநாதபுரம் சிவக்குமார் போடி மீனாட்சிபுரம் யோக ஸ்ரீ பூதிப்புரம் அய்யனார் முருகன் தென்கரை குணாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்