திருவாரூர் அரசு உதவி பெறும் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை இந்தியா உறுதிமொழி.

திருவாரூர் வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் தேசிய மாணவர் படை கப்பல் படை பிரிவு மாணவர்கள் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்

மகாத்மா காந்தியின் கனவு சுதந்திரம் பெற்று தருவது மட்டும் அல்ல நம் நாடு சுத்தமாகவும் சுகாதாரத்தையும் ஏற்படுத்துவேன் என்பதுதான் என்றும் அதற்காக ஒவ்வொரு வாரத்திற்கும் இரண்டு மணி நேரம் வீதம் ஒரு வருடத்திற்கு 100 மணி நேரம் செலவழிப்பேன் என்றும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்

நிகழ்வில் பள்ளியின் செயலாளர் பட்டதாரி ஆசிரியர் பாலசுப்பிரமணியன் தலைமையாசிரியர் தியாகராஜன் உதவித் தலைமை ஆசிரியர் முருகேசன் என்சிசி முதன்மை அதிகாரி சதீஷ்குமார் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *