சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களின் முன்னேற்றம் மற்றும் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையில் வாசவி விருக்ஷம் கிளப் (Vasavi Vruksham Club) சார்பில் கோவையில் பிரம்மாண்ட மராத்தான் போட்டி நடைபெற்றது.
சமமான அடிகள், சமமான உரிமைகள்” (Equal Steps, Equal Rights) என்ற முழக்கத்துடன், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற இந்த மராத்தானில் ஆயிரக்கணக்கான பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த பங்கேற்பாளர்களை வாசவி விருக்ஷம் கிளப்பின் நிர்வாகிகள் லக்ஷ்மிப்ரியா ஸ்ரீதரன்,பிரேம் துலாரி பாலாஜி மற்றும் விஜயலட்சுமி விஜய்குமார் ஆகியோர் வரவேற்றனர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மருத்துவர் பத்மஸ்ரீ கே.ஜி.பக்தவச்சலம் மற்றும் டாக்டர் சுமன் ஆகியோர் கலந்து கொண்டு மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
விழாவில் பேசிய விருந்தினர்கள், பெண்களின் உடல் நலன் மற்றும் சமூக அதிகாரமளித்தலின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினர்.
2.5 கி.மீ மற்றும் 5 கி.மீ என இரு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில்,14 வயதிற்குட்பட்ட சிறுமியர், 18 வயதிற்குட்பட்ட இளம்பெண்கள், பொதுப் பிரிவு மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் என நான்கு நிலைகளில் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் மற்றும் கலந்து கொண்டவர்களுக்கு ரொக்கப் பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.