மன்னார்குடி., மார்ச்.08

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் 30 நாட்கள் நடைபெறும் பங்குனித் திருவிழாவையொட்டி கொடியேற்றம் இன்று நடைபெற்றது. மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 18 நாள் பிரம்மோற்சவ திருவிழாவும்.

அதனை தொடர்ந்து, 12 நாட்கள் விடையாற்றி விழாவும் நடைபெறும் இந்தாண்டிற்கான பங்குனி திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் பெருமாள் சன்னதிக்கு எதிரே உள்ள பெருமாள் மண்டபத்தில் பெரிய கொடிமரத்தில், கருடன் உருவம் பொறித்த கொடியை தீட்சிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றினர்.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் இத்திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் உற்சவர் ராஜகோபாலசுவாமி, கண்ணன், கிருஷ்ணன், ராஜ பட்டாபிராமர், வேணுகோபாலர், மாயவநாதன், வைகுண்டநாதன் உள்ளிட்ட சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அப்போது சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் இதில் முக்கிய நிகழ்வுகளாக, மார்ச்.13 கண்ட பேரண்ட பக்ஷி, மார்ச் 17ல் தங்க சூரிய பிரபை, மார்ச் 23ல் வெண்ணெய்த்தாழி, இரவு வெட்டுங்குதிரை, 24 ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது .

நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து அறநிலையத்துறை சார்பில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் இளவரசன் செய்து வருகின்றனர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *