செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பெரும் பேர்கண்டிகை ஊராட்சியில் தத்தகிரி திருமண மண்டபத்தில் மறுசுழற்சி பாதுகாவலர்களுக்கான (Rag Pickers) மாவட்ட அளவிலான சந்திப்பு முகாம் நடைபெற்றது.
இதில் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தின் 8 பகுதிகளிலிருந்து 196 நபர்கள் கலந்து கொண்டனர் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்ட தாட்கோ திட்டத்தின்
மாவட்ட மேலாளர்கள் முழுமையாக பங்கேற்று, அரசின் பல நலத்திட்டங்களை குறித்து விரிவாக விளக்கினார். மேலும், ஓட்டுனர் உரிமம் பெற்ற மறுசுழற்சி பாதுகாவலர்களுக்கு வாகனம் வாங்க கடன் உதவி வழங்கப்படுவதாக
உறுதி அளித்தனர்.
நிகழ்ச்சியின் போது, நகராட்சி சார்பில் 16 நபர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது மேலும் தாட்கோ சார்பில் 20 பேருக்கு பதிவு அட்டைகள் வழங்கப்பட்டது.
மறுசுழற்சி பாதுகாவலர்களில் 6 நபர்கள் தங்களது வாழ்க்கை பயண அனுபவங்களை உணர்வுப்பூர்வமாக பகிர்ந்தனர். பலர் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடல்கள் பாடி, அனைவரும் உற்சாகமாக கொண்டாடினர்.
இது அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் ஊக்கமளித்த ஒரு இனிய
நாளாக திகழ்ந்தது இந்நிகழ்வில் மாவட்ட மேலாளர் தாட்கோ செங்கல்பட்டு மாவட்டம்
ஆர்.ராஜேந்திரன் தாட்கோ உதவியாளர் செங்கல்பட்டு மாவட்டம் சித்ரா பெரும்பேர்கண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி சங்கர்
மாவட்ட மேலாளர் தாட்கோ விழுப்புரம் மாவட்டம் ரமேஷ்குமார் மாநில தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர் கண்ணன் தூய்மைப் இந்தியா திட்ட மேற்பார்வையாளர் விஜயலட்சுமி உட்பட மதுராந்தகம் நகராட்சி அலுவலர்கள்
நிகழ்வில் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
இதில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவன மேலாளர்கள் ஜெயபிரகாஷ், வீரா, தங்கதுரை பொய்யாமொழி, ஆண்டோ சுரேஷ், அமர்நாத், வேலு, ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் கடற்கரை மாவட்டங்களில் செயல்படும் கோஸ்டல் சர்குலாரிட்டி திட்டம் பற்றிய கண்காட்சி நடைபெற்றது.