திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆலங்குடி ஊராட்சி சார்பாக கடைவீதியில் அதிமுக சார்பில் கழகத்தின் 54- வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்வில் வலங்கைமான் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சாத்தனூர் யூ. இளவரசன், கிழக்கு ஒன்றிய எம் ஜி ஆர் மன்ற செயலாளர் ஆலங்குடி வி.துரைராஜ் ஆகியோர் தலைமையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம் ஜி ஆர், புரட்சி தலைவி அம்மா ஆகியோர் திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்,
அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள கொடி கம்பத்தில் கழகத் கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் ஆலங்குடி ராணி துரைராஜ்,கிழக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் தென்குவளவேலி பால தண்டாயுதபாணி, ஆலங்குடி ஊராட்சி கட்சியின் நிர்வாகிகள் வி.ஆர்.கருப்பையன், எம்.முத்து, ஜி.குமார், என்.வீரமணி, வெங்கடாசலம், பாலு, தங்கராசு, குருவாடி செல்வராஜ், சிவானந்தம், செல்லத்துரை, பொன்.சுப்பிரமணியன், ஸ்ரீமன் ராஜ் ஹரிஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.