தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதை முன்னிட்டு 2வது நாளாக, தூத்துக்குடி மாநகரம் – திரேஸ்புரம் பகுதி – 8வது வார்டுக்கு உட்பட்ட முத்தரையர் நகர், மாதவ நாயர் காலனி உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீரை வெளியேற்ற மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்ததுடன், இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த நிகழ்வின்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் பவானி, வட்ட செயலாளர் ரவிச்சந்திரன், வட்ட பிரதிநிதிகள் மார்ஷல், ஆறுமுகம், திமுக சிறுபான்மையினர் அணி நிர்வாகி நிக்கோலஸ் மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.