பாசிக் நிறுவனத்தை தொடர்ந்து அரசு நடத்திட வேண்டும் ஏஐசிசிடியு புதுச்சேரி மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன்

ஏஐசிசிடியு புதுச்சேரி மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் தனது செய்தி குறிப்பில் கூறியதாவது

புதுச்சேரியில் கடந்த 39 ஆண்டுகாலம் இயங்கிவந்த புதுச்சேரி அரசிற்கு முழுவதும் உரிமையான பாசிக்(புதுச்சேரி அக்ரோ சர்வீஸ் அன்ட் இன்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் ) டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி நிரந்தரமாக மூடப்படும் என்று அரசு கொள்கை முடிவு எடுத்து தொழிலாளர் துறைக்கு அறிவிப்பு செய்திருப்பதை எஐசிசிடியு வன்மையாக கண்டிப்பதுடன் மூடும் முடிவை திரும்பப்பெற வற்புறுத்துகிறது.

பாசிக் நிறுவனம் மூடப்படுவது என்- ஆர் காங்கிரஸ்- பாஜக இரட்டை இஞ்சின் ஆட்சி கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பாசிக் நிறுவனம் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளுக்கும், புதுச்சேரி மக்களுக்கும் பாசிக் தொழிலாளர்க்கும் செய்திடும் மிகப்பெரிய துரோகம்.

பாசிக் நிறுவன சொத்துக்கள் பராமரிப்பு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் முடிவு அரசே நில வணிகத்தில் ஈடுபடுவதாகும். அரசு சொத்துக்கள் நீண்ட கால பராமரிப்பு என்ற பெயரில் தனியார்க்கு தாரை வார்ப்பதற்கு எஐசிசிடியு கடும் கட்டணம் தெரிவிப்பதுடன் தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வற்புறுத்துகிறது.
பாசிக் நிறுவனம் மிகவும் மோசமான சீரழிவுக்கு சென்றதன் காரணம் அதிகாரத்தில் இருந்த ஆட்சியாளர்களின் கடும் அலட்சியம், வேண்டியவர்களுக்கு சலுகை காட்டுதல் ,தொழில் ரீதியான மேலாண்மையின்மை, ஆட்சியாளர்களும் ,அதிகாரிகளும் கூட்டாக ஊழலில் ஈடுபட்டது


மேலும் பாசிக் நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதே அரசிற்கு மிகப்பெரிய தொல்லையாக இருப்பதாக பாசிக் மூடப்படுவதற்கு காரணமாக சொல்லப்படுவது என்- ஆர் காங்கிரஸ் ,பாஜக அரசாங்கம், பாசிக்கை நடத்திய அதிகாரிகளின் திறமையின்மையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. ஆட்சியாளர்களின், அதிகாரிகளின் தோல்விகளை ,அவர்கள் புரிந்த ஊழல்களை மூடி மறைப்பதற்கு தொழிலாளர் மீது பழி போடுவது ஏற்க முடியாத ஒன்று.

பாசிக் நிறுவனத்திற்கு ஏப்ரல் 2023 வரை ரூபாய் 182 கோடிகள் கடன்கள் இருப்பதற்கான காரணத்தை விசாரித்திட புதுச்சேரி ஆளுநர் அவர்கள் கமிட்டி அமைத்து குற்றமிழைத்தோர்களை தண்டித்திட வேண்டும்.

பாசிக் நிறுவனம் தொடர்ந்து இயங்கினால் மாதம் ஒன்றுக்கு1.25 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக காரணம் காட்டி மூடுவது நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களின் முன்புள்ள 670க்கும் மேற்பட்ட வழக்குகளில் இருந்து அதிகாரிகள் தப்பித்துக் கொள்ளும் சதியாகும்.

பாசிக் நிறுவனத்தின் ஆண்டு பேரவை கூட்டம் கடந்த 17 ஆண்டுகளாக கூட்டப்படவே இல்லை. மேலும் 17 ஆண்டுகளாக ஒன்றிய தணிக்கை துறையால் அனுமதிக்கப்பட்ட ஆண்டு வரவு செலவு அறிக்கைகளும் இதுவரையில் பொதுமக்களுக்கு, தொழிலாளர்களுக்கு தெரிவித்ததில்லை. அதற்கான காரணங்களை புதுச்சேரி அரசு வெள்ளை அறிக்கையாக பொதுமக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.

ஒன்றிய தணிக்கை துறையால் அங்கீகரிக்கப்படாத ஆண்டு அறிக்கைகளின் படி நிறுவனத்தை மூடுவது தொழிலாளர்களை ஏமாற்றும் செயலாகும்.
21 அயல்நாட்டு மதுபான கடைகளுக்கு விற்பனை உரிமை வைத்துள்ள பாசிக் நிறுவனம் அவற்றை தொடர்ந்து லாபகரமாக நடத்தாமல் தனியார் மதுபான கடை உரிமையாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டதை ,அவற்றைக் கீழ் குத்தகைக்கு விடுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டதை பற்றி தனிவிசாரணைக்கு புதுச்சேரி அரசு உத்தரவிட வேண்டும் என ஏ ஐ சி சி டி யு வற்புறுத்துகிறது.

மேலும் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தும் அரசின் கொள்கை முடிவை கைவிட்டு ,பாசிக் கடன்களுக்கு பொறுப்பேற்று பாசிக் நிறுவனத்தை தொடர்ந்து அரசு நடத்திட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *