தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள மண்டல கோட்டை கிராமத்தினர் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தும் பயனில்லை

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரில் விளம்பர பதாகை வைத்த நிலையில் அதனை அப்புறப்படுத்த வேண்டுமென்று தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கூறியதால் பரபரப்பு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி கீழக்குறிச்சி ஊராட்சி, அதன் ஒரு பகுதியாக இருந்து செயல்பட்டு வரும் மண்டலகோட்டை கிராமத்தினர் தங்கள் பகுதியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து போராடி வருகின்றனர்.

அவர்கள் கோரிக்கை பற்றிய விபரம் : கீழக்குறிச்சி ஊராட்சியில் உள்ள சிறுபான்மையினர் வசிக்கும் மண்டலக்கோட்டை கிராமத்தை தனி ஊராட்சியாக பிரித்து தர வேண்டும். மேற்படி மண்டலக்கோட்டை கிராமத்தில் கீழக்குறிச்சி கிழக்கு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் வாரத்தில் திங்கள்,புதன்,வெள்ளி கிழமைகளில் முகாம் அலுவலகமாக செயல்பட வேண்டும். என்பதனை வலியுறுத்தி கிராம மக்கள் ஒன்றிணைந்து கிராம கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்பட்டது.

மண்டலக்கோட்டை வளர்ச்சிக்கு அரசு அறிவிக்கும் எந்த திட்டங்களும் பஞ்சாயத்து நிர்வாகத்தினால் முழுமையாக கிடைக்க பெருவதில்லை. இதற்கு காரணம் தங்கள் பகுதி குக்கிராமம் என்பதாலேயே தங்கள் கிராமம் ஒதுக்கப்படுவதாகவும் இதனால் அரசு அறிவிக்கும் இன்சூரன்ஸ் மூலம் காப்பீடு , இழப்பீடு, விவசாய மானியம் உள்ளிட்ட எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும் தங்கள் பகுதி மக்களுக்கு கிடைக்கவில்லை என்றும், கோட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் வரை கோரிக்கை விடுத்தும் பயனில்லை என்பதால், இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜத்தை சந்தித்து மனு கொடுத்தும் பயனில்லை என்று கூறிய கிராம மக்கள் அதன் தொடர்ச்சியாக தேர்தல் புறக்கணிப்பினை கையில் எடுத்துள்ளதாக கூறினர்,

அதன் அடிப்படையில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை தங்கள் கிராம மக்கள் புறக்கணிப்பதாகவும் கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தங்கள் கிராம பகுதியில் ஒரு விளம்பர தட்டி வைத்துள்ளனர், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது தொடர்ந்து உடனடியாக அந்த போர்டை அப்புறப்படுத்த வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் காவல் துறை தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறி கிராம மக்கள் இன்று ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை ஆர்டிஓ சங்கர் மற்றும் மதுக்கூர் காவல்துறை ஆய்வாளர் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தேர்தலை புறக்கணிக்காமல் வாக்களிக்க வேண்டும் என்றும் தேர்தல் முடிந்த பிறகு தங்களது கோரிக்கைகளை கட்டாயம் செய்து தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். அப்படியும் கிராம மக்கள் ஒத்துக்கொள்ளாத நிலையில் கீழ குறிச்சி கிராமம் மற்றும் மேலதிகாரிகளிடம் கலந்து பேசி விட்டு வருவதாக கூறி சென்று விட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *