தேனி மாவட்டம் கூடலூர் எம் கே எம் ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் ரோட்டரி யின்
உலக நீர் தினத்தை முன்னிட்டு, எம்.கே.எம் ஸ்போர்ட்ஸ் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கூடலூர் இணைந்து வரைவுப் போட்டி மற்றும் போஸ்டர் தயாரிப்பு போட்டி ஆகியவற்றை மிகச் சிறப்பாக நடத்தினார்கள் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக:
அரசு மருத்துவமனை சிவில் சர்ஜன்டாக்டர் விஜயலட்சுமி
முன்னாள் கனரா வங்கி ஏஜிஎம் மூன்று முறை உலக சாதனை புரிந்த யோகா நிபுணர் டாக்டர் நாகேஷ் உள்பட சின்னமனூர், கோகிலாபுரம், கூடலூர், புதுப்பட்டி, காமய கவுண்டன்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்
இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாகமாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து, அதை எம் கே எம் ஸ்போர்ட்ஸ் வளாகத்தில் ஒன்றாக சேர்த்தனர். அங்கு தண்ணீரைப் பயன்படுத்தி, மாணவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இணைந்து மரக்கன்றுகள் நட்டனர்.
இதன் மூலம் நீர் வாழ்க்கையை காப்பாற்றுகிறது, வளர்க்கிறது என்ற முக்கிய செய்தி மாணவர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது.மேலும், மாணவர்கள் அனைவரும் நீரை சேமிப்போம்நீர் பாதுகாப்பு உறுதிமொழி
நான் தண்ணீரை வீணாக்க மாட்டேன்எனக்கு தேவையான அளவு மட்டுமே பயன்படுத்துவேன் குழாயை திறந்தபடி விட்டு செல்ல மாட்டேன் பிறரையும் தண்ணீரை சேமிக்க ஊக்குவிப்பேன் என் சுற்றுப்புறத்தையும் நீர்நிலைகளையும் சுத்தமாக வைத்திருப்பேன் முடிந்தவரை தண்ணீரை மீண்டும் பயன்படுத்த முயற்சிப்பேன் என்ற உறுதிமொழி எடுத்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில், நீதிபதிகள் மதிப்பீடு செய்ததன் அடிப்படையில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்கி நீர் மேலாண்மை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர்