வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மதுரையின் நீர் ஆதாரமான வைகை ஆற்றை பாதுகாக்க உறுதி மொழி ஏற்பு மற்றும் வைகை ஆற்றை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி மதுரை கல்பாலம் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் நடைபெற்றது வைகை ராஜன் தலைமை வகித்தார்.


சிறப்பு அழைப் பாளராக வைகை டிரஸ்ட் நிறுவனர் அண்ணாத்துரை கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில்பார்த்தசாரதி, மணிகண்டன், ஆறுமுகம் கல்வியாளர் ஆழ்வார் ராஜா, ரமணி மகேந்திர வர்மன்,சங்கரபாண்டியன்,
சட்டப்பஞ்சாயத்து அண்ணா துரை , வழிகாட்டி மணிகண்டன், எம்மால் இயன்றவரை கண்ணன், திருவள்ளூர் கண்ணன்,நேதாஜி சுவாமி நாதன், முரளிஜித், செந்தில்,சர்மிளா நாச்சியார்,பழனிவேல் ராஜன், கார்மேகம் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கீழ் கண்ட தீர்மானிங்கள் நிறைவேற்ற பட்டன. வைகை ஆற்றில் நேரடியாகக் கலக்கும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரே அதன் மிகப்பெரிய எதிரி. கழிவுநீர் வெளியேறும் முக்கிய வாயில் களிலேயே பரவலாக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதையும், ‘பசுமைப் பாலங்கள்’ போன்ற இயற்கை முறையிலான உயிர்-சுத்திகரிப்பு நுட்பங்களைப் பயன்படுத்தி ஆற்றுக்குள் செல்லும் முன்பே மாசுகளை அகற்றுவதும் மிக முக்கியம்.


வைகையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் சுருங்கி வருவதால் வெள்ளத்தைக் கடத்தும் திறன் குறைந்துள்ளது. எனவே, GIS மற்றும் ட்ரோன் (Drone) தொழில்நுட்பத்தைபயன்படுத்தி ஆற்றின் எல்லைகளைத் துல்லியமாக வரையறுக்க வேண்டும்.
வைகையின் ஆரோக்கியம் அதன் கிளைக் கால்வாய்கள் மற்றும் கண்மாய்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது. கிருதுமால் நதி உள்ளிட்ட பழங்கால நீர்வரத்துக் கால்வாய்களை உடனடியாகத் தூர்வாரி சீரமைப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும். இது மழைக் காலங்களில் நகர்ப்புற வெள்ளத்தைத் தடுத்து, ஆற்றில் தண்ணீர் தேங்கி நிற்பதைத் தவிர்க்கும்.


மேலோட்டமான அழகுபடுத்துதலைத் தவிர்த்து, ஆற்றின் சூழலியலை மீட்டெடுக்க வேண்டும். ஆக்கிரமித்துள்ள சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக நீர் மருது, மூங்கில் போன்ற மண்ணின் உள்நாட்டு மரங்களை நட வேண்டும். மேலும், ஆற்றுப்பகுதியில் நீர் ஊடுருவக்கூடிய தரைத்தளங்களை அமைப்பதன் மூலம் மழைநீர் மணற்பரப்பிற்குள் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
அரசின் கொள்கைகளால் மட்டும் ஆற்றைக் காக்க முடியாது. ‘பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் களிடத்தில் அதிகம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்..

வைகை நதியை மீட்டெடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் மாணவர்கள் அதிகம் பங்காற்ற வேண்டும். மதுரை மாநகரில் பொது மக்களின் “Civic-sense” என்பது கவலையளிக்கும் வகையில் உள்ளது. பொது மக்கள் சமூக பொறுப்புணர்வுடன் வைகையை மீட்டெடுக்க துணை நிற்க வேண்டும். மதுரை மாநகராட்சி ஏற்கனவே திட்டமிட்டுள்ள Artificial Intelligence Camera Surveillance திட்டத்தினை விரைந்து செயல்படுத்தி, சட்ட விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *