C K RAJAN
Cuddalore District Reporter
9488471235…
கடலூர் மாவட்டம் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட கலக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார், தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணிணி வாயிலாக முதற்கட்ட கலக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்ததாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, 2026 சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்று வருகிறது. அதன்படி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்களிப்பதை உறுதி செய்யும் இயந்திரங்கள் ஆகியவை கலக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் முதற்கட்ட பணி இன்று மேற்கொள்ளப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், ஆகியவை ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தேவையைவிட கூடுதலாக இருப்பிற்காக(Reserve) 20 சதவீதமும், வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவி தேவையை விட கூடுதலாக இருப்பிற்காக(Reserve) 30 சதவீதமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 2,590 வாக்குச்சாவடி மையங்களுக்கும் 3,108 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 3,108 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 3,367வாக்குப்பதிவு உறுதி செய்யும் கருவிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 151-திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள 279 வாக்குச்சாவடி மையங்களுக்கு 335 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 335 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 363 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்கள் எனவும், 152-விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 317 வாக்குச்சாவடி மையங்களுக்கு 380 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 380 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 412 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்கள் எனவும்,
153-நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள 256 வாக்குச்சாவடி மையங்களுக்கு 307 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 307 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 333 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்கள் எனவும், 154-பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள 309 வாக்குச்சாவடி மையங்களுக்கு, 371 மின்னணு வாக்குப்பதிவு செய்யும் இயந்திரங்கள், 371 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 402 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்கள் எனவும், 155-கடலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 258 வாக்குச்சாவடி மையங்களுக்கு, 310 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 310 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 335 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்கள் எனவும்,
156-குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள 278 வாக்குச்சாவடி மையங்களுக்கு 334 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 334 கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் 361 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்கள், 157-புவனகிரி சட்டமன்ற தொகுதியில் உள்ள 304 வாக்குச்சாவடி மையங்களுக்கு 365 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 365 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 395 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்கள், 158-சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 298 வாக்குச்சாவடி மையங்களுக்கு 358 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 358 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 387 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்கள், 159-காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியில் உள்ள 291 வாக்குச்சாவடி மையங்களுக்கு 349 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 349 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 378 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்கள் என மொத்தம் 2590 வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான 3108 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3108 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 3367 வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் கணினி முறையில் தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இப்பணி, நிறைவுற்றதையடுத்து அந்தந்த தொகுதிக்குரிய வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்து உரிய பாதுகாப்புடன் தலைமையிடத்திலிருந்து எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்படும். இதை தொடர்ந்து இரண்டாம் கட்ட கலக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்ற பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இது தொடர்பான அனைத்து பணிகளும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார், தெரிவித்தார்.
இந்தப் பணியின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கோ.புண்ணியகோட்டி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திருநாவுக்கரசு,தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அங்கீரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.