கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பெ.உமாதேவி அறிமுகக் கூட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி வால்பாறையில் உள்ள தனியார் அரங்கில் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மேத்யூ தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் முன்னதாக வால்பாறை அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி செய்தியாளர் சந்திப்பின்போது அதிமுகவில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் கிடைக்கவில்லை என்றும் அதிமுக நிர்வாகிகள் தன்னை புறக்கணித்த தாகவும் குற்றம் சாட்டியுள்ளார்

மேலும் தனது கணவர் அமுல் கந்தசாமி விட்டுச்சென்ற மக்கள் நலப் பணிகளை தனக்கு பாதுகாப்பான நாம் தமிழர் கட்சியில் இணைந்து செயல்படுத்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் உமா தேவியுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்து நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ள தாகவும் தெரிவித்தார்

அதைத் தொடர்ந்து பேசிய வேட்பாளர் உமா தேவி தன்னை தேர்தலில் வெற்றிபெறச் செய்தால் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாகவும், வால்பாறை பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு பட்டாவுடன் கூடிய நிரந்தர குடியிருப்பு கட்டி கொடுப்பதாகவும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி, தகவல் தொழில்நுட்பம் கௌதமன், செய்தி தொடர்பாளர் பாலாஜி, மாவட்ட தலைவர் மாரீஸ் வரன் மற்றும் நிர்வாகிகள் தமிழ்வாணன், சாஸ்தா, ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்
29.03.206

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *