துறையூர் ஏப்-05
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே என் அருண் நேரு அலுவலகத்தில் 03-04-2026 அன்று திமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திராவிட முன்னேற்றக் கழகம் முதன்மை செயலாளர், அமைச்சர் கே என் நேரு வழிகாட்டுதல் படியும், மாவட்ட கழக செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன் உத்தரவுப்படி, திருச்சி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ரா.நரேஷ்குமார் தலைமையில் மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன் முன்னிலையில் துறையூர் சட்டமன்ற தொகுதிக்கான வழக்கறிஞர் அணியின் 2026 சட்ட மன்றத் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ராஜி, ஏ.கே.பழனிவேல், குமரேசன்,கே.டி. அறிவழகன், சரண்ராஜ், முகமது ரபிக், செல்வராஜ்,சி.செல்வராசு, பாபு,சுந்தர் ஆதித்தன்,கண்ண பரமாத்மா, தமிழரசன், சூர்ய பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *