தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

பொதுமக்கள் பயன்படுத்தும் மண் சாலையில் கற்களைக் கொட்டியதால் பரபரப்பு. சாலையில் நடந்து செல்ல முடியாமல் முதியவர்கள் அவதி. சட்டமன்றத் தேர்தலில் புறக்கணிப்பதாக கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்.!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தில்லை கவுண்டன் புதூர் கிராமத்தில் அனைத்து சமுதாய பொதுமக்களும் வகுத்து வருகின்றனர். இங்கு வசித்து வரும் பொது மக்களில் சுமார் என்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் காலங்காலமாக பயன்படுத்தி வரும் மண்பாதையை ஒரு சிலர் கற்களை கொண்டு அடைத்து பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அடைத்து வைத்துள்ளனர்.

இதனால் அந்தச் சாலையில் நடந்து செல்லும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கற்கள் தடுக்கி கீழே விழும் சூழல் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் வருவாய் அலுவலரிடமும் , வருவாய் தாசில்தார் இடமும் மூலனூர் போலீசார் இடமும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புகார் தெரிவித்தனர்.

அந்தப் புகாரில் பொதுமக்கள் பயன்படுத்தும் பொது சாலையை தனிப்பட்ட இரண்டு நபர்கள் கற்களைக் கொட்டி அந்த வழியில் செல்ல முடியாத அளவிற்கு கற்களை குவித்து வைத்துள்ளனர் இதனால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டு வருவதாகவும் புகார் தெரிவித்தனர். ஆனால் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர்

இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று சுமார் 30க்கும் மேற்பட்டோர் கருப்பு கொடியை கையில் ஏந்தியவாறு வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை என்றால் அரசு தரப்பில் வழங்கப்பட்ட ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு நகல்களை திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துவிட்டு தேர்தலை புறக்கணிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *